உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீலக்கால் நண்டுக்கு சர்வதேச சான்றிதழ்  பெறத் திட்டம் 

நீலக்கால் நண்டுக்கு சர்வதேச சான்றிதழ்  பெறத் திட்டம் 

ராமநாதபுரம்: பாக் ஜலச்சந்தி கடல் பகுதியில் பரவலாக காணப்படும் நீலக்கால் நண்டுக்கு மரைன் ஸ்டிவார்டுஷிப் கவுன்சில்( எம்.எஸ்.சி.,) தரச்சான்று பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாக பாக் ஜலசந்தி நண்டு சதை பயன்படுத்து வோர் சங்க தலைவர் முனிரூதீன் முல்லா தெரிவித்தார். ராமநாதபுரத்தில் நண்டு சதை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் பாக் ஜலசந்தியில் நீந்தும் நீலக்கால் நண்டுகளின் பாதுகாப்பு, மேம்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பாக் ஜலசந்தி கடலோர மாவட்ட மீனவர் களிடம், உலக கடல் உணவக சந்தையில் நீலக்கால் நண்டுகளின் பாதுகாப்பு குறித்து விவரிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் முனிரூதீன் முல்லா கூறியதாவது: நிலையான மீன் பிடித்தலை ஊக்குவிக்க எம்.எஸ்.சி.,எனும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் மூலம் கடல் சார்ந்த உணவுப் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். தற்போது பாக் ஜலசந்தியில் உள்ள நீலக்கால் நண்டுக்கு எம்.எஸ்.சி., சான்றிதழ் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு சில நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் உணவுக்காக வேட்டையாடப்படுவதை கட்டுப்படுத்த 'மரைன் ஸ்டீவார்டுஷிப் கவுன்சில்' சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது நண்டு சதை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் நீலக்கால் நண்டுகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாக் ஜலசந்தி கடற்கரை பகுதி யில் உள்ள தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாத புரம் மாவட்டங்களில் இந்த நண்டுகள் அதிகம் கிடைக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தரவுகள் சேமிக்கும் பணி நடந்து வருகிறது. எம்.எஸ்.சி., சான்றிதழ் பெற்றால் நீலக்கால் நண்டுகளை சர்வதேச சந்தைக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். தற்போது மீனவர்களை ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது என்றார். மத்திய கடல்வள மீன் ஆராய்ச்சி ஆராய்ச்சி யாளர் ஜோஸ்லீன் ஜோஸ் கூறிய தாவது: பாக் ஜலசந்தி கடலில் மீன் வளத்தை மேம் படுத்தும் முயற்சியாக முதல் முறையாக நீலக்கால் நண்டுக்கு எம்.எஸ்.சி., சான்றிதழ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 1995 முதல் பாக் ஜலசந்தியில் மீன்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. தற்போது மீனவர்களிடையே நீலக்கால் நண்டுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகால் நண்டு சார்ந்த ஆராய்சி முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதன் பின் 9 செ.மீ.,க்கு அதிகமான அளவில் உள்ள நண்டுகளை மட்டுமே பிடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி