உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய் நாற்றுகளை நடவு

மிளகாய் நாற்றுகளை நடவு

ஆர்.எஸ்.மங்கலம் :

மிளகாய் நாற்று நடவு: விவசாயிகள் ஆர்வம்

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழையால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகாய் நாற்றுகளை நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்காட்டுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் வயல்களில் மிளகாய் செடிகள் வளர்ச்சி நிலையில் இருந்த போது பெய்த மழையால் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் பாதிப்படைந்தன. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் மிளகாய் வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி விட்டு தயார் நிலையில் வைத்திருந்த மிளகாய் நாற்றுகளை பாதிக்கப்பட்ட மிளகாய் வயல்களில் நடவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மிளகாய் நாற்று நடவு: விவசாயிகள் ஆர்வம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை