மேலும் செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினவிழா: மரக்கன்று நடுதல்
07-Jun-2025
ராமநாதபுரம்: உலகில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 11ல் உலக விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துஉள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் 'விளையாட்டை தேர்ந்தெடு, ஒவ்வொரு நாளும் என்பது இந்த ஆண்டு மையக்கருத்தை வலியுருத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திருவாடானை காங்., எம்.எல்.ஏ., கருமாணிக்கம் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். காங்., கட்சியினர் பங்கேற்றனர். ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ.,யும் ஐ.நா தன்னார்வளருமான சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
07-Jun-2025