உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி மெட்ரிக் பள்ளி அருகே பிளக்ஸ் போர்டுகளால் ஆபத்து; விபத்து அச்சத்தில் மாணவர்கள்

பரமக்குடி மெட்ரிக் பள்ளி அருகே பிளக்ஸ் போர்டுகளால் ஆபத்து; விபத்து அச்சத்தில் மாணவர்கள்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோடு பகுதி மெட்ரிக் பள்ளி அருகில் பிளக்ஸ் போர்டுகளால் மாணவர் களுக்கு அபாயம் உள்ளது. பரமக்குடியில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் மற்றும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் பிளக்ஸ் போர்டுகள் கட்டுப்பாடு இன்றி வைக்கப்படுகின்றன. இதனால் மதுரை, ராமேஸ்வரம் நெடுஞ்சாலை தொடங்கி, மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி தெருக்கள், மற்றும் வைகை ஆறு சர்வீஸ் ரோட்டோரங்களில் அணிவகுக்கிறது. ஒவ்வொரு போர்டுகளும் முறையாக கட்டப்படாமல் காற்று வீசும் நேரங்களில் சரிந்து விழுகின்றன. இதேபோல் கொடி கம்பங்களும் பெயரளவில் இரும்பு கம்பிகள் மூலம் நடப்பட்டு வருகிறது. இவை ஆங்காங்கே சாயும் சூழலில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக் கின்றனர். குறிப்பாக சர்வீஸ் ரோடு மெட்ரிக் பள்ளி அருகில் மற்றும் பல்வேறு பள்ளி அருகில் மஹால்கள் அதிகரித்துள்ள சூழலில் பிளக்ஸ் போர்டுகளும் முறையற்ற வகையில் வைக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். இதனால் எதிரெதிரில் வருபவர்கள் பற்றி அறிய முடியாமல் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே பரமக்குடியில் பிளக்ஸ் போர்டுகளை வைப்பதை முறைப்படுத்திட நகராட்சி, வருவாய், போலீஸ் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை