முன்னாள் முதல்வரை கண்டித்து பிளக்ஸ்
முதுகுளத்துார்; முதுகுளத்துார் தேரிருவேலி விலக்கு ரோட்டில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை கண்டித்து பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆத்துார் சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரையின் போது சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைப்பதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என பேசியிருந்தார். முதுகுளத்துார் வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சார்பில் மதுரை விமான நிலையம் குறித்து இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை துாண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி அரசியல் ஆதாயம் தேடும் முன்னாள் முதல்வர் பழனிசாமி கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டு முதுகுளத்துார் தேரிருவேலி விலக்கு ரோட்டில் முதுகுளத்துார் வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் வைக்கப் பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.