சர்வதேச கடலோர துாய்மை தினம் ராமேஸ்வரத்தில் உழவாரப் பணி
ராமேஸ்வரம், : சர்வதேச கடலோர துாய்மை தினத்தை யொட்டி ராமேஸ்வரம் கடற்கரையில் உழவாரப் பணி நடந்தது.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் இணைந்து நேற்று கடலோர துாய்மை தினத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், சேதமடைந்த வலைகளை சேகரித்தனர்.இதில் 899 கிலோ கழிவு மற்றும் குப்பை சேகரித்தனர். இந்த உழவாரப் பணியில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வேல்விழி, ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை கமாண்டிங் அதிகாரி தினேஷ்குமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், மரைன் போலீஸ் எஸ்.ஐ., காளிதாஸ், ராமேஸ்வரம்அரசு கல்லுாரி மாணவர்கள், யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள்,இந்திய கடற்படை வீரர்கள், பலர் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.