மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் திருட்டு
22-May-2025
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலமுந்தலில் தாழையடி ஏழு பிள்ளை காளியம்மன் கோயிலில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தி விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடற்கரையோர கிராமமான மேலமுந்தலில் பழமை வாய்ந்த தாளையடி ஏழு பிள்ளை காளியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதி பொது மக்கள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலில் உள்ள கருப்பண்ணசுவாமி, முனியசுவாமி, முருகன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளன. வெளியூரில் வசிப்போர் மற்றும் இச்சுவாமிகளை குலதெய்வமாக வழிபாடுவோரால் ஆண்டுதோறும் விழா நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஆடி பவுர்ணமி அன்று திருவிழா நடக்கிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் நுழைந்து தாழையடி ஏழு பிள்ளை காளியம்மன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பினர்.இதுகுறித்து கிராம தலைவர் சின்னு மற்றும் பொதுமக்கள் சாயல்குடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து சிலைகளை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
22-May-2025