உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ் ஏட்டு பலி: வாகனம் கண்டுபிடிப்பு

போலீஸ் ஏட்டு பலி: வாகனம் கண்டுபிடிப்பு

தேவிபட்டினம் : வாகனம் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு முருகானந்தம் பலியான வழக்கில் தப்பி ஓடிய வாகன டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். தொண்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 49. இவர் ராமநாத புரம் ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். செப்.,8 அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை ஏ.மணக்குடி பஸ் ஸ்டாப்பில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பாலைக்குடி போலீசார் விபத்து ஏற்படுத்திய பதிவு எண் இல்லாத சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆர்.எஸ்.மங்கலம் பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த குழந்தை மகன் அருண்பாண்டியனை 27, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை