உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமநாதபுரம் மாவட்ட வழிபாட்டு  தலங்களில் போலீஸ் பாதுகாப்பு 

 ராமநாதபுரம் மாவட்ட வழிபாட்டு  தலங்களில் போலீஸ் பாதுகாப்பு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பஹல்காம் பகுதியில் ராணுவத்தினர் சீருடையில் வந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் 26 பேரை சுட்டுக்கொலை செய்தனர். இது குறித்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களான கோயில்கள், பள்ளிவாசல்கள்,சர்ச்சுகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை