மேலும் செய்திகள்
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
09-Oct-2024
கவுதமியிடம் நில மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
05-Oct-2024
ராமநாதபுரம்,:இன்ஸ்டாகிராமில் வாளுடன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த வெளி நாட்டில் வாழும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த முகமது ஆசத்கான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் சமூக ஊடகப்பிரிவு செயல்படுகிறது. சமூக ஊடகங்களின் பதிவு செய்யப்படும் கருத்துக்களை இங்கு கண்காணிக்கின்றனர்.இதை ஆய்வு செய்த போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த முகமது ஆசத்கான் வாளுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.மேலும் பிற சமூத்தினரிடையே ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை வளர்க்கும் விதமாகவும் பதிவு செய்திருந்தார்.இதையடுத்து முகமது ஆசத்கான் மீது சமூக ஊடகப்பிரிவு போலீஸ்காரர் நாகராஜன் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் அளித்தார். போலீசார் முகமது ஆசத்கான் மீது வழக்குப்பதிந்தனர். இவரது முழு விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முகமது ஆசத்கான் துபாயில் பணிபுரிந்து வருவது தெரிய வந்துள்ளது. அவர் ஊர் திரும்பும் போது விமான நிலையத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
09-Oct-2024
05-Oct-2024