அஞ்சல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் கோட்டத் தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் முஹம்மது இஸ்ஸதீன் வரவேற்றார். எட்டாவது ஊதியக்குழு அமைப்பது, நிறுத்தப்பட்ட பஞ்சப்படியை வழங்குவது, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது, மெடிக்கல் அலவன்ஸ் ரூ.5000 உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.