உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் நெசவாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பரமக்குடியில் நெசவாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பரமக்குடி: -பரமக்குடி, எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேசன் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் பாலசுப்பிரமணியன் பெடரேஷன் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது ரிபேட் மானியம் ஒரு பகுதி விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், இ--டெண்டர் முறையில் 2024 முதல் சங்கங்கள் கச்சா பொருள்கள் கொள்முதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதனால் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பதாக பெடரேஷன் தலைவர் சேஷைய்யன், செயலாளர் கோதண்டராமன் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி