உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பணிநிரந்தர உத்தரவிற்காக 17 ஆண்டுகளாக காத்திருக்கும் மின் நிலையப் பணியாளர்கள்; முதல்வர் ஸ்டாலின் உதவ வலியுறுத்தல்

பணிநிரந்தர உத்தரவிற்காக 17 ஆண்டுகளாக காத்திருக்கும் மின் நிலையப் பணியாளர்கள்; முதல்வர் ஸ்டாலின் உதவ வலியுறுத்தல்

ராமநாதபுரம்: தி.மு.க., ஆட்சியில் (2008ல்) ராமநாதபுரம் அருகே வழுதுார் எரிவாயு சுழலி மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்து அறிவிக்கப்பட்டு அப்படியே கிடப்பில் உள்ளது. பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என தொழி லாளர்கள் வலியுறுத்தினர். கடந்த 2002ல் ராமநாத புரம் அருகே வழுதுாரில் பெல் நிறுவனத்தின் மூலம் எரிவாயு சுழலி மின் நிலையம் துவக்கப்பட்டது. பிறகு 2004ல் மின்சார வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்ட போது 86 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2007ல் மத்திய அரசின் சிறந்த மின் உற்பத்திக்கான விருது வழுதுார் எரிவாயு மின் நிலையத்திற்கு கிடைத்தது. இரண்டாம் கட்ட மின் நிலைய அடிக்கல் விழாவிற்கு வந்த அப்போதை தி.மு.க., அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒப்பந்த பணியாளர்களை மின் வாரிய தினக்கூலி ஊழி யர்களாக மேடையில் அறிவித்தார். அதன் பிறகு 2008ல் இரண்டாம் கட்ட மின் உற்பத்தி துவக்க விழாவிற்கு வந்த மத்திய அமைச்சர், எம்.பி., பங்கேற்ற விழாவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒப்பந்த பணியாளர்கள் 86 பேரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மேடையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 2009ல் மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் பணி நிரந்தர அரசாணை வழங்கப்படும் என சங்க பொதுச்செயலாளர் கூறினார். தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் அப்படியே கிடப்பில் விட்டுவிட்டனர். இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், எப்படியும் பணி நிரந்தமாகிவிடும் என்ற நம்பிக்கையில் 17 ஆண்டு களாக பணிபுரிகிறோம். தற்போது வயது அதி கரித்து விட்டதால் வேறு பணிக்கு செல்ல முடி யாமல் குறைந்த ஊதி யத்தில் குடும்பத்தை கடன் வாங்கி நடத்து கிறோம். எனவே கருணை கூர்ந்து 86 பேருக்கும் முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தர ஆணை வழங்கி எங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை