உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில், குமரய்யா கோயில் அருகில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயில், முகவை ஊருணி காசி விஸ்வநாதர் கோயில், ஆர்.எஸ்.மடை ராஜேஸ்வரர் கோயில், ராமநாதபுரம் ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உட்பட சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.--------*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை