முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சமீபத்தில் பெய்த மழையால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாகவும், கீழே விழும் நிலையிலும் மரக்கிளைகள் இருந்தன. இந்நிலையில்மருத்துவமனை வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. மேலும் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்காக மோட்டார் பம்ப் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.