தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ராமேஸ்வரம் ; ராமேஸ்வரத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1985--86ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில் ராமேஸ்வரம் அரசு பள்ளி, பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியில் நடந்து முடிந்த 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்றிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் உமையணனை பாராட்டி கவுரவித்தனர். பட்டிமன்ற நடுவர் மதுக்கூர் ராமலிங்கம் பரிசுகள் வழங்கி பேசினார். ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், விழுதுகள் அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் தினகரன், கவுன்சிலர் சங்கர், மீனவர் சங்க தலைவர் போஸ், நல்லாசிரியர் ஜெயகாந்தன், தாய்தமிழ் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி, ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்க செயலாளர் களஞ்சியம், ராமநாதபுரம் தீயணைப்பு அலுவலர் அருள்ராஜன், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.