உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல்; பஸ் பாஸ் புதுப்பிக்காததால் அவதியடைகின்றனர்

ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல்; பஸ் பாஸ் புதுப்பிக்காததால் அவதியடைகின்றனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மாற்றுத் திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறை பாடுகள் உள்ளவர்களுக்கு கட்டணமில்லாத பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் நடை முறைப்படுத்த தேவையான மென் பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகவை வழியாக மாற்றுத்திற னாளிகள் நலத்துறையுடன் இணைந்து செயல்படுத்த பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே பஸ் பாஸ் பயன்படுத்தி வரும் மாற்றுத் திறனாளிகள் அக்., 31 வரை கட்டணமில்லாத பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம் என அரசு போக்கு வரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரசு போக்கு வரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் போது பழைய பஸ் பாஸ் காலாவதி ஆகிவிட்டது என பஸ்சில் ஏற்ற கண்டக்டர்கள் மறுத்து வருதாக மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், அரசு போக்குவரத்து கழக அமைச்சர் சிவசங்கர் அக்.,31 வரை கட்டணமில்லா பயண அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவித்து உள்ளார். ஆனால் இது குறித்து ராமநாத புரம் பஸ் கண்டக்டர்கள் பலருக்கு விபரம் தெரியாத காரணத்தால் எங்களது சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளோம். எனவே உயர் அதிகாரிகள் அனைத்து பஸ் கண்டக்டர்களிடம் பஸ் பாஸ் கால நீட்டிப்பு விபரத்தை தெரிவித்து இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்டமாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை