பிளக்ஸ் போர்டு வைக்கத் தடை
திருவாடானை: திருவாடானையில் மதுரை- தொண்டி சாலையில் ஓரியூர், சன்னதி தெரு ஆகிய நான்கு ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இப்பகுதியில் கட்சி, திருவிழா, திருமணவிழா, நினைவு அஞ்சலி போன்ற பல பிளக்ஸ் போர்டுகள் வைப்பது வழக்கமாக இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் அந்த இடத்தில் பிளக்ஸ் போர்டு வைக்க போலீசார் தடைவிதித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தடையை மீறி பிளக்ஸ் போர்டு வைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.