ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து இண்டி கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்த நடவடிக்கை எடுக்கவும், பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்களுக்கு கூலியை நிறுத்தி வைக்காமல் உடனே வழங்கவும், 3ம் பிரகாரத்தில் நிறுத்திய பூஜைகளை மீண்டும் துவக்க அனுமதிக்கக் கோரி நேற்று ராமேஸ் வரம் மருதுபாண்டியர் சிலை அருகில் இண்டி கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் காங்., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட வெற்றி கழகம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, வெள்ளைச்சாமி, பழனிச்சாமி, கருணாகரன், சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.