பழைய ஓய்வூதிய திட்டம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், கோவிந்தன், காரத்திகேயன், சேதுபதி, வைரவன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.