மேலும் செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-Dec-2024
ராமநாதபுரம், : பொங்கல் தொகுப்புடன் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் அய்யாத்துரை பேசினார். கட்டுமானம் உள்ளிட்ட நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வலியுறுத்தினர். கட்டுமான தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சந்தானம், பொருளாளர் கருப்பசாமி, சி.ஐ.டி.யு.,. மாவட்ட செயலாளர் சிவாஜி, தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
28-Dec-2024