உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனமகிழ் மன்றத்தை திறந்தால் போராட்டம்

மனமகிழ் மன்றத்தை திறந்தால் போராட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மனமகிழ் மன்றத்தை திறந்து மக்களின் போராட்டத்தை துாண்ட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டக் குழு உறுப்பினர் முருகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே வியாபார நோக்கத்தில் சிலர் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை மற்றும் சூதாட்ட கிளப்பை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆற்றுப்பாலம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மட்டும் பணிபுரியும் மில் செயல்படுகிறது.இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசிக்கின்றனர். அதோடு அபிராமம் பரமக்குடி செல்லும் மக்கள் பஸ்சிற்காக காத்திருந்தும் செல்லும் முக்கிய இடமாகவும் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பெண்கள் நடமாடும் இடங்களில் மனமகிழ் மன்றம் திறந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு அனுமதி வழங்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி