உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். நகரிகாத்தான் குரூப் சிறுனாகுடியில் பூர்வீக நிலங்கள் உள்ள வாரிசுதாரரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பத்திரப் பதிவு செய்யாமல் பட்டா மாறுதல் செய்யும் அதிகாரிகளை கண்டித்தும், நில உரிமையாளர்களின் பெயருக்கு மட்டும் பயிர் இன்ஸ்சூரன்ஸ் பதிவு செய்ய வேண்டும். அரிமளம், கண்ணங்குடி, அறுநுாற்றிவயல், அந்திவயல், அறிவித்தி வழியாக செல்லும் திருச்சி-ராமேஸ்வரம் அரசு பஸ்சை அடிக்கடி நிறுத்தாமல் இயக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ