கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து பேசியதாவது: தமிழக அரசு ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் கொண்டு தற்காலிகமாக பணி நியமனம் செய்வதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் செல்வம் மாவட்ட துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், வட்டாரத் தலைவர்கள் பங்கேற்றனர். –––