மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
கமுதி: கமுதி அருகே கோட்டைமேட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 86ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.தேசிய செயலாளர் சுரேஷ் தேவர் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி அமைப்பு செயலாளர் சப்பாணிமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லெட்சுமணன் வரவேற்றார்.மாநில இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.பின்பு இதேபோன்று கமுதி, முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி, அபிரா மம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. கமுதி ஒன்றிய தலைவர் திருக்குமரன், செயலாளர் இருளாண்டி, இளைஞரணி செயலாளர் சித்தன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.