உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனோவியல் விழிப்புணர்வு

மனோவியல் விழிப்புணர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர்களுக்கான மனோவியல்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.மலேசியாவை சேர்ந்த மனவிஞ்ஞான ஆய்வாளர் டாக்டர் காதர் இப்ராஹிம் பேசியதாவது: நாம் எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் உயர்வாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அப்போது தான் சிந்திக்கும் திறனும் ஆற்றலும் அதிகரிக்கும். யோகா போன்ற உடற்பயிற்சி மூலம் மனதையும், உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளலாம் என்றார்.மின்னணுவியல் துறை பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ