உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று பொதுவினியோக குறை தீர்க்கும் முகாம்

இன்று பொதுவினியோக குறை தீர்க்கும் முகாம்

திருவாடானை: திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் இன்று பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை சொல்ல மனுக்கள் கொடுக்கலாம். பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வகையில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை தாலுகா பாண்டுகுடி ரேஷன் கடையில் இன்று (நவ.8) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். பொது வினியோகத்தில் ஏற்படும் குறைகளை குறிப்பிட்டு மனுக்களாக கொடுக்கலாம். பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் செய்வது, அலைபேசி எண் மாற்றுதல், குடும்பதலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ