உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசையில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 89 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.ஒன்றியக் குழு தலைவர்புல்லாணி முன்னிலை வகித்தார். சின்னாண்டி வலசை ஊராட்சி தலைவர் சஞ்சய் காந்தி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ராமநாதபுரம் கோட்டாட்சியர் கோபு, கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், வேளாண் உதவி இயக்குனர்அமர்லால் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.வருவாய்த் துறை சார்பில் 12 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல், 20 பேருக்கு நத்தம் பட்டா மாறுதலும் வழங்கப்பட்டன. தையல் மிஷின், சலவைப் பெட்டி, தோட்டக்கலை துறை சார்பில் பழக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை