உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புல்வாமா தாக்குதல் நினைவு தினம்

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்

முதுகுளத்துார் : புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நாளையொட்டி சேது சீமை பட்டாளம் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முதுகுளத்துார் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு சேது சீமை பட்டாளம் முதுகுளத்துார் கிளை சார்பில் ராணுவ வீரர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர். இதே போன்று கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே சேதுசீமை பட்டாளம் கமுதி கிளை சார்பில் ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். இதில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ