உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி பொங்கல் விழா கொண்டாட்டம்

புரட்டாசி பொங்கல் விழா கொண்டாட்டம்

கமுதி : கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் விநாயகர், அரியநாச்சி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேகம், 31ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கணபதி ஹோமம் துவங்கி சிறப்பு யாகசால பூஜை நடந்தது. பின்பு காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அக்னி சட்டி, பால்குடம், அலகு, வேல் குத்தி கோயிலுக்கு வந்தனர். அரியநாச்சி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபா ராதனை நடந்தது. கிராம மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை