உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எம்.ஜி., பப்ளிக் பள்ளியில்  வினாடி வினா போட்டி

எம்.ஜி., பப்ளிக் பள்ளியில்  வினாடி வினா போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் எம்.ஜி., பப்பளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் வினாடி வினா போட்டிகள் நடந்தது. 'மேத் கியூஸ் ஜீரோ கிரான்ட்' என்ற பெயரில்நடந்த இப்போட்டிக்கு பள்ளியின் நிறுவனர்கள்டாக்டர் ஜி.சுப்பிரமணியம், டாக்டர் எம்.பிரேமலெட்சுமி தலைமை வகித்தனர். தாளாளர் டாக்டர் ஹர்ஷவர்த்தன்துவக்கி வைத்தார். முதல்வர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். போட்டியில் 15 பள்ளிகள் பங்கேற்றன. செய்யது அம்மாள் பப்ளிக்பள்ளி முதலிடம் பெற்று சுழல் கேடயத்தை வென்றது. கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை பள்ளி தாளாளர் ஹர்ஷவர்தன் வழங்கினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை