வெறிநாய்கள் தொல்லை
கீழக்கரை: கீழக்கரை நகரில் வெறிநாய்கள் கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் அதிகமான நபர்களை விரட்டி கடித்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: கீழக்கரை நகர் பகுதிகள் பஸ் ஸ்டாண்ட், பஜார் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதிகளில் அதிகளவு வெறிநாய்கள் கூட்டமாக சுற்றி தெரிகின்றன. காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லக்கூடிய சிறுவர்கள் மற்றும் முதியவர்களை விரட்டி கடிப்பதால் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் வெறிநாய்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.