வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செம. இதெல்லாம் 2024-25 ல ஊழலே செய்யாத ரயில்வே அமைச்சகத்தால் போடப்பட்டது.
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சென்னையிலிருந்து வந்த போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பேண்டோகிராப் கம்பி மோதியதில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் புறப்பட்ட போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8:00 மணிக்கு ராமேஸ்வரம் நோக்கி வந்தது. உச்சிப்புளி அருகே இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை நிலையம் பின்புறத்தில் தண்டவாளத்தில் பாதுகாப்பு கருதி 224 மீ.,க்கு மின்சார கம்பி இருக்காது. அங்கு இந்த ரயில் வந்த வேகத்தில் 224 மீ., கடந்து மறுமுனையில் உள்ள மின்சார கம்பியை தொட்டதும் மீண்டும் அதே வேகத்தில் செல்லும். ஆனால் போர்ட் மெயில் ரயில் கடற்படை விமான நிலையம் கடந்து செல்வதற்கு முன்பே ரயில் இன்ஜின் மீதுள்ள பேண்டோகிராப் கம்பி மேலே எழுந்ததும் எதிர்பாராமல் மின்சாரகம்பி மீது மோதி அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதே இடத்தில் காலை 7:20 மணிக்கு ரயில் நின்றது. பின் ராமேஸ்வரத்தில் இருந்து டீசல் ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு போர்ட் மெயில் இன்ஜின், பெட்டிகளை இழுத்துக் கொண்டு காலை 10:20 மணிக்கு ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. இதனால் பயணிகள் 2:20 மணி நேரம் ரயில் பெட்டியிலேயே இருந்தபடி அவதியுற்றனர். நேற்று காலை 6:50 மணிக்கு மதுரையில் புறப்பட்ட பாசஞ்சர் ராமேஸ்வரம் வராமல் பரமக்குடி ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மின்சார கம்பிகள் சரி செய்யப்பட்ட பின் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.
செம. இதெல்லாம் 2024-25 ல ஊழலே செய்யாத ரயில்வே அமைச்சகத்தால் போடப்பட்டது.