உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தை குளிர்வித்த மழை : மக்கள் மகிழ்ச்சி

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தை குளிர்வித்த மழை : மக்கள் மகிழ்ச்சி

திருவாடானை : திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணபட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்தது. விவசாயிகள் கூறுகையில், மழை பெய்ய வேண்டிய தருணத்தில் பெய்யாததால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்து விட்டது. தற்போது பெய்ய துவங்கியுள்ளது. மீண்டும் விதை நெல் விலை கொடுத்து வாங்கி விதைக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இம்மழை விவசாயிகளுக்கு சிறிதளவு நம்பிக்கை அளித்துள்ளது. தொடர்ந்து இன்னும் சில தினங்கள் மழை நீடிக்கும் பட்சத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும் நிம்மதி அடையும் சூழல் ஏற்படும். சுற்றுப்புற பகுதிகளில் நெல் பயிர்கள் முளைக்கும் பட்சத்தில் நெல் விவசாயப் பணிகள் தீவிரமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை