உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் நிரம்பிய கண்மாய்கள் தலைமை செயல் அலுவலர் ஆய்வு

மழையால் நிரம்பிய கண்மாய்கள் தலைமை செயல் அலுவலர் ஆய்வு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மழையால் நிரம்பிய கண்மாய்களை தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் பார்வையிட்டனர்.திருவாடானை தாலுகாவில் தலைமை செயல் அலுவலர் கடல் சார் வாரியம் துணைத்தலைவர், மாவட்ட கண்காணிப்பாய்வு அலுவலர் வள்ளலார், ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தனர். கட்டிவயல் ஊராட்சி ஆக்கலுார் கண்மாய், நகரிகாத்தான் ஊராட்சியில் உள்ள பெரிய கண்மாயை பார்வையிட்டனர். கட்டவிளாகம் ஊராட்சியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பவர்களிடம் பராமரிப்பு முறையை கேட்டனர். கால்நடை மருத்துவர்கள் அவசர காலங்களில் கால்நடை வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஆர்.டி.ஓ. ராஜமனோகரன், தாசில்தார் அமர்நாத், கட்டிவயல் ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி