உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் திருவாடானையில் விவசாயப் பணிகள் ஜரூர்

மழையால் திருவாடானையில் விவசாயப் பணிகள் ஜரூர்

திருவாடானை; மழையால் திருவாடானை தாலுகாவில் களை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேர் நிலங்களில் விவசாய பணிகள் நடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பயிர்கள் வளர்ந்து வரும் போது அதிகமான களைகளால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கபட்டுள்ளது. அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து காடாங்குடி விவசாயிகள் கூறியதாவது- மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அடி உரமிட்டதால் பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ளது. களை அதிகமாக உள்ளது. கூலி ஆட்கள் பற்றாக்குறையால் வெளியூர்களிலிருந்து ஆட்டோக்களில் ஏற்றி வந்து களை எடுத்து வருகிறோம். உரம் விலை கூடுதல், கூலி ஆட்கள் சம்பள உயர்வால் இந்த ஆண்டு விவசாய செலவு அதிகமாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ