ராமநாதபுரம்: குழாய் உடைந்து வீணாகிறது காவிரி குடிநீர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பாரமரிப்பு பணி மற்றும் ஜல்-ஜீவன் திட்டத்தில் பணியின் போது குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது.ராமநாதபுரம் நகர், கிராமப்புறங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாயில் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, ஜல்-ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் இணைப்பு வழங்கும் பணிக்காக குழி தோண்டும் போது குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குறிப்பாக லேத்தம்ஸ் பங்களா ரோட்டில் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. இதே போன்று குடிநீர் வீணாகும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.