உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில கிரிக்கெட் போட்டியில் சாதித்த ராமநாதபுரம் மாணவருக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சாதித்த ராமநாதபுரம் மாணவருக்கு பாராட்டு

ராமநாதபுரம்: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தங்கம் வென்றுள்ளது. இந்த அணியின் கேப்டன் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர் அருண் புவனேஷ்சை அதிகாரிகள், பொது மக்கள் பாராட்டினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றில் சென்னை-ஈரோடு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. தமிழகத்தில் முதல் பரிசு பெற்ற இந்த அணி வீரர்களுக்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் தமிழ்நாடு முதல்வர் நிதியில் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதுாரைச் சேர்ந்த மறைந்த வழக்கறிஞர் கணேசன், சுகுணா தம்பதியின் மகன் அருண் புவனேஷ் சென்னை அணியின் கேப்டன் சிறப்பாக செயல்பட்டு முதல்வர் கோப்பை போட்டியில் சாதித்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை வழுதுார் ஊர் மக்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பாராட்டினர். அருண் புவனேஷ் சென்னை விளையாட்டு விடுதி மாணவராக தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை