உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில பயிற்சி முகாமில் ராமநாதபுரம் மாணவர்கள் 

மாநில பயிற்சி முகாமில் ராமநாதபுரம் மாணவர்கள் 

ராமநாதபுரம்; தஞ்சை மாவட்டம் வல்லம் சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான மாரிக்கால பயிற்சி முகாமில் ராமநாதபுரம் மாணவர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத்துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் டிச.24 முதல் ஜன.1 வரை மாரிக்கால கலைப்பயிற்சி முகாம் நடந்தது.மதுரை மண்டல கலைப்பண்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் பரதநாட்டிய ஆசிரியர் பாலாஜி தலைமையில் பரத நாட்டிய மாணவிகள் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி தன்ஷிகா, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவதர்ஷினி,யஷ்வந்தா, சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி தருணி பங்கேற்று பரத நாட்டியம், கிராமிய நடனம், கைவினை, ஓவியம் போன்ற கலைகளை கற்றுக்கொண்டனர்.தஞ்சாவூர் மண்டல கலைப்பண்பாட்டு மைய உதவி இயக்குநர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை