உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழக கபடி அணிக்கு ராமநாதபுரம் இளைஞர் தேர்வு

தமிழக கபடி அணிக்கு ராமநாதபுரம் இளைஞர் தேர்வு

ஆர்.எஸ்.மங்கலம்,:தமிழ்நாடு அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, தமிழ்நாடு கபடி அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தேனியில் நடந்தது.இதில் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் காளிதாஸ் மகன் வீர செல்வதாஸ் 19, தமிழக கபடி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இவரை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறையினரும் மோர்ப்பண்ணை மக்களும் பாராட்டினர். இவர் இரு ஆண்டுக்கு முன்பு, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக அணியில் இடம் பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ