மேலும் செய்திகள்
புயல் எச்சரிக்கையால் 6ம் நாளாக மீனவர்களுக்கு தடை
30-Nov-2024
ராமேஸ்வரம்,: பெஞ்சல் புயல் எதிரொலியாக 8 நாட்களுக்கு பின் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் எச்சரிக்கையால் நவ.,24 முதல் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் நவ.,24 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் புயல் கரை கடந்ததால் மீனவர்களிடம் புயல் அச்சம் நீங்கியது. நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கினர். எட்டு நாட்களுக்கு பின் மீன்பிடிக்கச் செல்வதால் அதிக மீன்கள் சிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.இதே போல் 9 நாட்களுக்கு பின் இன்று (டிச.,3) பாம்பன், மண்டபம் தெற்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
30-Nov-2024