மேலும் செய்திகள்
நடைதிறப்பு மாற்றம்
04-Sep-2025
ராமேஸ்வரம்:செப்., 7ல் சந்திர கிரகணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை அடைக்கப்பட உள்ளது. சந்திர கிரகணத்தையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் அன்று இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இரவு 11:30 மணிக்கு மேல் கோயிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடாகி இரவு 11:41 மணிக்கு மேல் கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் செப்.,8 அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேக பூஜை நடக்கிறது. இதனைத்தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை நடத்தப்பட்டு மீண்டும் நடை அடைக்கப்படும். அதிகாலை 5:00 மணி முதல் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடக்கும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
04-Sep-2025