மேலும் செய்திகள்
ஆடியில் ரூ.54 லட்சம் காணிக்கை
19-Sep-2025
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 1.14 கோடி வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் ஊழியர்கள் காணிக்கைகளை சேகரித்தனர். அவற்றை கோயில் கல்யாண மண்டபத்தில் உதவி ஆணையர் ரவீந்திரன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, சேலம் பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் குழுவினர் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் 1 கோடியே 14 லட்சத்து 32 ஆயிரத்து 252 ரூபாயும், தங்கம் 32 கிராம், வெள்ளி 3 கிலோ 800 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
19-Sep-2025