மேலும் செய்திகள்
இன்று இனிதாக (13.12.2024) திருவள்ளூர்
13-Dec-2024
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.,23ல் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி அன்று நடையடைக்கப்பட உள்ளது.டிச.,23ல் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து 3:30 முதல் 4:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனைத் தொடர்ந்து கால பூஜை நடக்கும்.பின் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். இதனால் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். மதியம் 12:10 மணிக்கு கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும் நடை திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடக்கும்.எனவே காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
13-Dec-2024