ரேஷன் ஊழியர்கள் வரும் 7ம் தேதி ஸ்டிரைக்
ராமநாதபுரம்:பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும்; பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட, 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துஉள்ளனர்.சங்கத்தின் மாநில செயலர் மாரிமுத்து கூறுகையில், “எங்கள் சங்கம் சார்பில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு பல முறை மனு அளித்தும் நிறைவேற்றப்பட வில்லை. நவ., 7ல் வேலை நிறுத்தம் செய்து, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது,” என்றார்.