உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

 ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று துவங்கிய போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 200 பேர் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.மாரிமுத்து கூறியதாவது: பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். உணவு பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளரை நியமிக்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை