உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு சட்டக் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு

அரசு சட்டக் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு சட்டக் கல்லுாரியில் அரசியலமைப்பு சட்ட முகப்புரை வாசிக்கப்பட்டது.நாட்டின் 75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கல்லுாரியில் விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் தலைமை வகித்தார். ராமநாதபுரம் அஞ்சல் நிலைய கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் முன்னிலை வகித்தார். அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் துர்கா லட்சுமி வரவேற்றார்.நீதிபதி பிரசாத், ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சேக் இப்ராஹிம், மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் முத்துக்குமார், ஜீவரத்தினம், விஜிப்பிரியா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 75-வது அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு கல்லுாரியில் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை சட்ட படிப்பில் பயிலும் மாணவர் முகம்மது பாசில் வடிவமைத்த தபால் அட்டை அரசு சட்டக் கல்லுாரி சார்பில் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.அரசு சட்டக் கல்லுாரிக்கான மாதிரி நீதிமன்றத்தின் சின்னத்தை சிறப்பு விருந்தினர்கள் திறந்து வைத்தனர். விழாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டது. கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., சார்பில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை அரசு சட்டக் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி