நில மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு
ராமநாதபுரம்:நில மோசடி செய்த வழக்கில் சினிமா பைனான்சியர்அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது. ஜாமின் மறுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்துார் அருகே சுவாத்தான் கிராமத்தில் 150 ஏக்கர் நிலம்வாங்கித் தருவதாக நடிகை கவுதமியிடம் காரைக்குடியை சேர்ந்த சினிமாபைனான்சியர் அழகப்பன் ரூ.3 கோடியே 16 லட்சம்பெற்றுள்ளார். அவர் மோசடியாக செபி நிறுவனத்தால் விற்பனைக்குதடை செய்யப்பட்ட 64 ஏக்கர் நிலத்தை கவுதமிக்குவிற்ற பிரச்னையில் அழகப்பன், குடும்பத்தினர், நில புரோக்கர் நெல்லியான், உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்டகுற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.இந்த வழக்கில் அழகப்பனின் மேலாளர் ரமேஷ்சங்கரை சென்னை எழும்பூரில் அக்.3ல்ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல்செய்தார். ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கவுதமி மனு தாக்கல்செய்தார். ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட் பிரபாகரன் தள்ளுபடி செய்தார். இதையடுத்து ரமேஷ் சங்கர் ராமநாதபுரம் முதன்மை மாவட்டநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஆட்சேபம் தெரிவித்து நேற்றுகவுதமி நேரில் வந்து வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.கவுதமியின் மனு ஏற்கப்பட்டு, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.