வட்டார அளவில் உணவு திருவிழா
முதுகுளத்துார், : முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான பாரம்பரிய உணவுதிருவிழா நடந்தது. ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சித்ரா பி.டி.ஓ.,க்கள் அன்புக்கண்ணன், ஜானகி முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் அரசகுமார் வரவேற்றார்.முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், ராகி, வாழைப்பூ வடை, கஞ்சி காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள், பாரம்பரிய உணவுகள் சமைத்து கண்காட்சியில் வைத்தனர். சிறப்பாக உணவு தயாரித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. உடன் உதவி திட்ட அலுவலர் தங்கபாண்டி உட்பட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.