உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாத காவிரி கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்

ரெகுநாத காவிரி கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்

முதுகுளத்துார்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பகுதியில் உள்ள ரெகுநாத காவிரி கால்வாயில் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றி துார்வாரும் பணி நடக்கிறது. முதுகுளத்துார் பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக காமராஜர் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் புல்வாய்குளத்தில் துவங்கி எஸ்.பி.கோட்டை, ஆப்பனுார், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் முதுகுளத்துார், கருமல், காத்தாகுளம், உத்தரகோசமங்கை, கடலாடி உள்ளிட்ட 71 கண்மாய் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். மொத்த பரப்பளவு 41 கி.மீ., கடந்த பல ஆண்டுகளாகவே முறையாக ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் வருவது கிடையாது. இதனால் ரெகுநாத காவிரி முழுவதும் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் பாலைவனம் போல் மாறிவிட்டது. முதுகுளத்துார், கடலாடி பகுதியில் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் வீணாகி வந்தது. எனவே விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் ரெகுநாத காவிரி துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கடந்த சில மாதத்திற்கு முன்பு முதற்கட்டமாக ரூ.16 கோடியில் துார்வாரும் பணிகள் நடக்கிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரத்து கால்வாயில் உள்ள சீமைக்கருவேலம் மரங்களை அகற்றி துார்வாரும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை